தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்காத ஆசிரியரின் வாகனம் மீது பட்டாசு வீசிய மாணவர்கள்
தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்காத ஆசிரியரின் வாகனத்தின் மீது பள்ளி மாணவர்கள் பட்டாசு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு வீசிய மாணவர்கள்
இந்திய மாநிலமான கேரளா, மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் 12 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இதனால், தேர்வை கண்காணிக்க பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர்.
இதில், ஒரு அறையில் இருந்த மாணவர்கள் மட்டும் காப்பியடிக்க முயன்றுள்ளனர். இதனை அந்த அறையில் கண்காணிப்பாளர்களாக இருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தடுத்துள்ளனர்.
இதனால், ஆசிரியர்கள் மீது மாணவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தேர்வு முடிந்ததும் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களின் வாகனங்களின் மீது அந்த மாணவர்கள் பட்டாசுகளை வீசினர்.
இதனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வாகனங்களின் மீது பட்டாசுகள் வீசியது யார் என்று கண்டுபிடிக்க அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |