பேனா, பென்சில் கொண்டு தாளம் போட்ட மாணவர்கள்! வீடியோ பகிர்ந்து பாராட்டிய அமைச்சர்
இந்திய மாநிலம், கேரளாவில் உள்ள பள்ளி வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை பகிர்ந்து, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
தாளம் போட்ட மாணவர்கள்
கேரள மாநிலம், திருவாங்கூரில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. அந்த பள்ளியில் 7 -ம் வகுப்பு பயின்றுவரும் சில மாணவர்கள், வகுப்பறையில் பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை கொண்டு பெஞ்சில் தாளம் போட்டுள்ளனர்.
இதனை, அவ்வழியாக சென்ற ஆசிரியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் பகிர்ந்த வீடியோ
மாணவர்கள் தாளம் போட்டு தனது கலைத்திறமையை வெளிப்படுத்தும் வீடியோவை கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், "கோழிக்கோடு மாவட்டம் திருவாங்கூர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் அதனதேவ், பகத், நிலவ் கிருஷ்ணா, முகமது ரைஹான் ஆகியோர் ஒரு பேனா, பென்சில் மற்றும் பெட்டியுடன் வகுப்பில் மகிழ்ச்சியாக தாளம் போட்டனர்.
அப்போது அழகான தாளத்தையும், குழந்தைகளின் குரலையும் கேட்ட ஆசிரியர் அங்கேயே நின்று குழந்தைகளின் கலைத் திறமையை தனது போனில் பதிவு செய்தார்" என்று கூறியுள்ளார் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |