பிரான்சில் அதிகரித்துவரும் கடுமையான வறுமை... ஆய்வு முடிவுகள்
Study shows extreme poverty, homelessness on the rise in France: பிரான்சில் கடுமையான வறுமையும் வீடற்ற நிலையும் அதிகரித்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியான சர்வதேச ஆய்வொன்றின் முடிவுகள், பிரான்சில் கடுமையான வறுமையும் வீடற்ற நிலையும் அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ளன.
அதிகரித்துவரும் கடுமையான வறுமை...
பிரான்சிலேயே, பெரிய உணவு வழங்கும் தொண்டு நிறுவனமான Restos du Cœur என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள் நேற்று வெளியாகின.
2018க்கும் 2025க்கும் இடையில், கடுமையான வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அடுத்த பத்து ஆண்டுகளில், பத்தில் ஒருவருக்கு உணவுத் தேவைப்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கிடையில், தங்கள் உணவு வங்கிகளில் உணவு வாங்குவோரில் தெருக்களில் வாழ்வோரும் அடங்குவர் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
அதாவது, கடுமையான வறுமை மட்டுமின்றி வீடற்ற நிலையும் அதிகரித்துவருவதையே இது காட்டுகின்றது.
பிரான்சில் 200 பேரில் ஒருவர் வீடில்லாமல் தெருக்களில் வாழ்வதாகவும், இந்த எண்ணிக்கை 2018க்கும் 2025க்கும் இடையில், 62 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.