ஷூவை கழற்றிவிட்ட கடி மன்னன் சுவாரஸ்! தூக்கி எறிந்த எதிரணி வீரர்..வைரல் வீடியோ
க்ருஸிரோ அணிக்கு எதிரான போட்டியில் க்ரெமியோ வீரர் சுவாரஸின் செயல் மைதானத்தில் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
க்ரெமியோ அபார வெற்றி
Serie A தொடரின் நேற்றைய போட்டியில் க்ரெமியோ (Gremio) மற்றும் க்ருஸிரோ (Cruzeiro) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்தது.
இதில் க்ரெமியோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் க்ருஸிரோவை வீழ்த்தியது. லூயிஸ் சுவாரஸ் (29), கார்பல்லோ (54) மற்றும் பெப்பே (78) ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்தப் போட்டியில் கடி மன்னன் என்று அழைக்கப்படும் சுவாரஸின் செயல், மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. க்ரெமியோ வீரர் சுவாரஸ் மீது க்ருஸிரோ அணி வீரர் மோதியபோது அவர் இடறி கீழே விழுந்தார்.
? When the sh*thouse becomes the sh*thoused.
— The Sportsman (@TheSportsman) August 28, 2023
Luis Suarez had his boot thrown away by an opposing player and he was less than impressed... pic.twitter.com/ysWLfC2jtH
ஷூவை தூக்கி எறிந்த மார்லன்
பின்னர் சுவாரஸ் தனது ஷூவை கழட்டிவிட்டு நடுவரிடம் முறையிட்டார். உடனே க்ருஸிரோவின் மார்லன் அந்த ஷூவை தூக்கி வெளியே வீசினார்.
இதனால் சுவாரஸ் எழுந்து சென்று நடுவரிடம் மார்லனின் செயல் குறித்து புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து களநடுவர் மார்லனுக்கு மஞ்சள் அட்டை காட்டினார்.
இது மார்லனை கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால், சுவாரஸின் செயல் மைதானத்தில் பெரும் சிரிப்பலையை உண்டாக்கியது.
Getty
வைரல் வீடியோ
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் உருகுவே வீரரான சுவாரஸ், தனது தோளில் கடித்ததாக இத்தாலி வீரர் ஜியோர்ஜியோ சில்லினி நடுவரிடம் முறையிட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் சில போட்டிகளில், சுவாரஸ் இதேபோல் எதிரணி வீரர்களை கடித்ததாக குற்றம்சாட்டப்பட்டதால், அவர் கடி மன்னன் என்று அழைக்கப்படுகிறார். தற்போது அவர் ஷூ மூலம் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
Getty/SporTV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |