பணியின் முதல் நாளிலே சப்-கலெக்டரை தோப்புக்கரணம் போட வைத்த வக்கீல்கள்
வினோதமான தண்டனை வழங்கிய சப்-கலெக்டர், வக்கீல்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தோப்புக்கரணம் போட்ட சப்-கலெக்டர்
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேதம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ராஹி.
இவர் அப்பகுதியில் நேற்று முதல் நாள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொது கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை பார்த்த சப் கலெக்டர் அவரை தோப்புக்கரணம் போட வைத்தார்.
இதற்கு அப்பகுதியில் உள்ள வக்கீல்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரிங்கு சிங் ராஹிக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர்.
இதனால் நிலைமை மோசமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து உட்கார்ந்து தோப்புக்கரணம் போட்டார். அதோடு மன்னிப்பும் கேட்டார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய சப் கலெக்டர், "வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் மன்னிப்பு கேட்டேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |