ரூ 22,000 கோடி கடன் ரத்து... சுவிட்சர்லாந்துக்குப் பறக்கும் Essel குழுமத்தின் தலைவர்
Subhash Chandra To Take Up Job In Switzerland: எசல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேரவுள்ளார்.
எசல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் உள்ள முதலீட்டு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த ரூ. 22,006.57 கோடி கடனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கடன் கொடுத்தவர்கள் பெறும் வகையிலான கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அங்கீகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் தனது புதிய முயற்சிகளுக்காக குடும்பத்தினரிடம் இருந்து கடன் வாங்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுபாஷ் சந்திரா வெளியிட்டுள்ள ஒரு காணொளி அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அதில், இன்று நான் மிகவும் எளிமையான முறையில் பேசுகிறேன். எல்லாவற்றையும் இழந்த ஒருவரைப் பற்றி நான் பேசவில்லை.
என்னிடம் மீதமுள்ள கடைசி 6.5 கோடி ரூபாயை திட்டத்தின்படி செலுத்த வேண்டும். எனக்கு ஒரு சிறிய குடியிருப்பு வீடு உள்ளது, அதை நான் வாடகைக்கு விட்டுள்ளேன், அந்த வருமானத்தைக் கொண்டு என் செலவுகளைச் சமாளித்து வருகிறேன்.
எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மீண்டும் சம்பாதிப்பேன். நான் ஒரு முன்னோடி. நல்ல மற்றும் புதிய விஷயங்களை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து அவ்வாறே செய்வேன் என தெரிவித்துள்ளார்.
எசல் குழுமத்தின் தலைவர் என்ற முறையில், சுபாஷ் சந்திராவின் வணிக சாம்ராஜ்யம் ஊடகம், உள்கட்டமைப்பு, கேளிக்கை பூங்காக்கள் எனப் பல துறைகளில் பரந்து விரிந்துள்ளது.
தனது காணொளி அறிக்கையில், 75 வயதான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் ஒரு வேலை பெறுவது என்ற தனது அடுத்தகட்ட தொழில் நகர்வு குறித்துப் பேசியுள்ளார்.

தற்போது, சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகள் செய்யும் நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு திட்டம் வைத்துள்ளேன். மேலும், குடும்பத்தினரிடமிருந்து 2-4 கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னேறிச் செல்லக்கூடிய எங்களின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
NCLT அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், சுபாஷ் சந்திரா தனது ரூ. 22,006.57 கோடி கடனில் வெறும் ரூ 6.5 கோடி மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
எஞ்சியத் தொகை மொத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சுபாஷ் சந்திராவின் மொத்த கடன் தொகையில் அவர் 0.03 சதவீதம் மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |