இரவு முழுவதும் கேட்ட வெடிச்சத்தம்: கீவ் சுரங்கப்பாதை ரயில் கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்
Subway in Kyiv damaged in Russia’s overnight attack: உக்ரைன் முழுவதும் நள்ளிரவில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் கீவ் மெட்ரோ ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது.
கீவ் சுரங்கப்பாதை ரயில் கட்டமைப்பு மீது தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து இரவோடு இரவாக ரஷ்யா மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் அந்நகரின் முக்கியமான போக்குவரத்து முனையமான சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது.
இதில் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தின் முழுமையான விவரங்களோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

இரவில் தலைநகர் முழுவதும் பலத்த வெடி சத்தங்கள் கேட்டன. கடந்த சில மாதங்களில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல் இது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் அத்துமீறல் காரணமாக தலைநகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
கீவ் மட்டுமின்றி கார்கிவ், சபோரிஜியா, டினிப்ரோ, செர்காசி, ஸ்மிலா மற்றும் பாவ்லோஹிராட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.