உடற்பயிற்சி செய்யும்போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?.
உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும், ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், உடல் கட்டமைப்பில் சாதிக்க வேண்டும் பல்வோறு காரணங்களை கொண்டு பலர் ஜிம்மிற்கு வருகின்றனர்.
இதேபோல் மருத்துவரின் அறிவுரையின் பேரிலும், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உடல் கட்டுக்கோப்பில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் சிலர் வருவதுண்டு.
இதில் பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்றவுடன் உடல் கட்டமைப்பு வந்து விடும் என்று கருதுகின்றனர்.
இதனால் அவர்கள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் ஜிம்மிற்கு வந்த ஆரம்பம் முதலே அதிகப்படியான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இப்படி செய்யும் போது அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த ஒரு செயலுக்கும் வழிகாட்டுதல் என்பது அவசியமான ஒன்று. ஏனெனில் வழிகாட்டுதல் இல்லாத செயல் நமக்கு ஆபத்தை உருவாக்கக்கூடும். அதுபோல தான் உடற்பயிற்சியிலும்.
புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்பும் நபர் தனக்கான வழிகாட்டியை சரியாக தேர்வு செய்வது அத்தியாவசிய மானதாகும். ஜிம்மில் சேர விரும்பும் நபர் தமக்கு பயிற்சி அளிக்கும் நபரின் அனுபவத்தையும், அவரது திறனையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதன் மூலம்தான் நாம் சரியான உடற்பயிற்சியை பெற முடியும். இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே உடற்பயிற்சி செய்யும் போது கவனமாக இருங்கள்.