நர்சரி பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்: பறிப்போன 33 குழந்தைகள் உயிர்
சூடானில் நர்சரி பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டஜன் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நர்சரி பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்
தெற்கு சூடானின் கோர்டோபான் மாகாணத்தில் நடத்தப்பட்ட பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 33 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரா இராணுவ படையினரால் கலோகி நகரில் அமைந்துள்ள நர்சரி பள்ளி மீது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள துயரத்தின் மதிப்பை கணக்கிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை விட உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன, யுனிசெஃப்(UNICEF) சண்டையில் ஈடுபடும் இருதரப்பும் உடனடியாக மோதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |