சூடானில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 60 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
Sudan Gold Mine Collapse 60 Miners Killed: தெற்கு சூடானில் தங்க சுரங்க விபத்தில் குறைந்தது 60 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்
தெற்கு சூடானில் வெஸ்ட் கார்டோஃபான் என்ற பகுதியில் எல்-நஹுத் நகரில் அமைந்துள்ள அல்-சாராAl-Zaraa) என்ற தங்க சுரங்கம் யாரும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.
சுரங்கத்தின் கட்டமைப்பு பாதை ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக அமைந்து இருப்பதால், முதல் சுரங்கம் இடிந்ததும் அடுத்தடுத்து மற்ற சுரங்கங்களும் இடிந்து விழுந்தது.
மீட்பு பணிகள் மிகவும் மெதுவாக மற்றும் ஆபத்தான முறையில் அங்குள்ள சுரங்க தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

புதன்கிழமை காலைக்குள் கிட்டத்தட்ட 60 தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
இருப்பினும் பாறைகள் மற்றும் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி மீதமுள்ளவர்களின் உடல்களையும் மீட்க கனரக இயந்திரங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.