சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த போராட்டக்காரர்கள்: வெளிநாட்டினர் வெளியேற உத்தரவு
சூடானில் சண்டையிடும் இரு ராணுவ குழுக்களும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற, 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
400க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே நடக்கும் போரில், இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோனி பிலிங்கென் தெரிவித்துள்ளார்.
@afp
’கடந்த 48 மணி நேரமாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தையை தொடர்ந்து சூடானின் ராணுவ படைகள்(SAF) மற்றும் துணை ராணுவப்படையினர்(RSF) ஏப்ரல் 24 நள்ளிரவிலிருந்து தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்’ என அந்தோனி பிலிங்கென் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
சூடான் அழிவின் விளிப்பில் இருப்பதாக ஐ.நா சபை தலைவர் எச்சரித்துள்ளார். மேலும் சூடான் தலைநகரான கார்டூமில் நடக்கும் போரால் மற்ற பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்போரில் 427 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3700 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
@afp
இந்நிலையில் எகிப்து நாட்டின் தூதரகத்தில் பணி புரியும் கைரோ என்பவர், தங்கள் நாட்டின் மக்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார் என சூடானிலுள்ள எகிப்து தூதரகம் தெரிவித்துள்ளது.
@afp
மேலும் 4000க்கும் மேற்ற சூடான் வாழ் வெளிநாட்டவர்கள், சூடானை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சூடான் நாட்டு மக்கள் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருத்துகள் போன்ற அடிப்படைத் தேவைக்காக கஷ்டப்படுவதாக தெரியவந்துள்ளது.