2000 பொதுமக்கள் படுகொலை... டிக்டோக் காணொளியால் கைதான இராணுவத் தலைவர்
சூடானில் இராணுவத் தலைவர் ஒருவர் தனது அட்டூழியங்களுக்காகவும், டிக்டோக் காணொளியில் அதை வெளியிட்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடூரமான காட்சிகள்
சூடானில் இராணுவத் தலைவரான அபு லுலு என்பவரே தனது அட்டூழியங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்-ஃபாஷர் நகரைக் கைப்பற்றியபோது துஷ்பிரயோ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பல துணை ராணுவத்தினரில் இந்த கொடூர போராளியும் ஒருவர்.
நகரம் கைப்பற்றப்பட்டதத் தொடர்ந்து பொதுமக்கள் தூக்கிலிடப்படுவதைக் காட்டும் கொடூரமான காட்சிகள் வெளிவந்ததை அடுத்தே இந்தக் கைது நடவடிக்கைகள் நடந்தன.
இதனிடையே, பரவலான கொலைகளுக்கான சான்றுகள் பெருகி வருவதால், மேலும் அட்டூழியங்கள் நிகழும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. வெளியான காணொளி ஒன்றில் அபு லுலு ஒன்பது நிராயுதபாணியான நபர்களுக்கு முன்னால் நின்று அவர்களை நேரடியாகச் சுடுகிறார், வீரர்கள் ஆரவாரம் செய்து அவரது பெயரை முழக்கமிடுகிறார்கள்.
முற்றுகையிடப்பட்ட எல்-ஃபாஷர் நகரில் இருந்து வெளிவரும் பல வன்முறை காட்சிகளில் இதுவும் ஒன்று. நகரம் RSF வசம் சிக்கியதன் பிறகு 48 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் RSF உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
டிக்டோக் காணொளி ஒன்றில், 2,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதற்கு தானே காரணமாக இருக்கலாம் என்று அபு லுலு பெருமையாகக் கூறினார்.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் கடந்த ஏப்ரல் 2023 இல் இருந்தே ஒரு கொடிய மோதலை எதிர்கொண்டு வருகிறது. சூடான் இராணுவமும் RSF எனப்படும் துணை இராணுவத்திற்கும் இடையே கொடூரமான சண்டை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நீண்ட 18 மாதங்களுக்கும் மேலான முற்றுகைப் போருக்குப் பிறகு, RSF இறுதியாக எல்-ஃபாஷரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. நாட்டின் மேற்கில் உள்ள பரந்த டார்பூர் பகுதியில் சூடான் இராணுவத்தின் கடைசி கோட்டையாகும் இந்த எல்-ஃபாஷர்.
RSF தலைவர்களில் ஒருவரான
முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற முயன்ற நிலையில், RSF பெருமளவில் பொதுமக்களைப் படுகொலை செய்யத் தொடங்கியது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக RSF தலைவர்களில் ஒருவரான அபு லுலு சக வீரர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். உள்நாட்டுப் போர் காரணமாக 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளை பஞ்சம் வாட்டி வதைத்ததால், உயிர்வாழும் முயற்சியில் சில குடும்பங்கள் புல்லைத் தின்னும் மிக மோசமான நிலைக்கு உள்ளானார்கள்.
அக்டோபர் 26 மற்றும் 27 திகதிகளில் 2,000க்கும் மேற்பட்ட நிராயுதபாணி அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக RSF கொடூரமான குற்றங்களைச் செய்துள்ளது என இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். RSF உறுப்பினர்களின் 48 மணி நேரக் கொலைவெறியில் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 460 தாய்மார்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |