விஜயகாந்த் உடல்நிலையில் திடீரென பின்னடைவு: மருத்துவர்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.
விஜயகாந்த் சாரை நினைக்காத நாள் இல்லை.., அவரின் பழைய சிரிப்பை பார்க்கணும்: நடிகர் பார்த்திபன் வேண்டுதல்
இதனால், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர் பூரண நலம் பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர்.
குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை
இதனிடையே, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோவில், "கேப்டன் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வழக்கமான ஒன்று தான். அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் நானும் இருந்து அவரை நல்லபடியாக பார்த்து வருகிறேன். அவர், பூரண நலம் பெற்று வீடு திரும்பி நிச்சயமாக உங்களை சந்திப்பார்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு விஜயகாந்தின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |