திடீரென செங்குத்தாக நின்ற தலைமுடி: சகோதரர்கள் அடுத்து சந்தித்த பயங்கரம்
அமெரிக்கக் குடும்பம் ஒன்று மலையேற்றத்துக்குச் சென்றிருந்த நிலையில், திடீரென இயற்கைக்கு மாறான சில நிகழ்வுகளை சந்தித்துள்ளது.
திடீரென செங்குத்தாக நின்ற தலைமுடி
1975ஆம் ஆண்டு, கலிபோர்னியாவிலுள்ள Sequoia தேசிய பூங்காவுக்குச் சென்றுள்ளார்கள் மைக்கேல் (Michael McQuilken, 18), அவரது தம்பி ஷான் (Sean, 12), அண்ணன் ஜெஃப் (Jeff), தங்கை மேரி (Mary, 15) மற்றும் மேரியின் தோழி மார்கீ (Margie) ஆகியோர்.
Image: Getty Images
Moro Rock என்னும் பாறையின் உச்சியை அவர்கள் அடைந்ததும், திடீரென அவர்களில் சிலருடைய தலைமுடி செங்குத்தாக நிற்கத் துவங்கியுள்ளது. ஆச்சரியம் பொங்க, ஒருவரையொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு, சரி கீழே இறங்கலாம் என புறப்பட்டுள்ளார்கள் அனைவரும்.
சகோதரர்கள் சந்தித்த பயங்கரம்
அப்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. திடீரென மின்னல் ஒன்று மைக்கேலையும் ஷானையும் தாக்கியுள்ளது. சில விநாடிகள் அந்தரத்தில் மிதந்த மைக்கேல் கீழே விழ, ஷான் சுயநினைவிழந்துள்ளார். அவரது முதுகு, கண் புருவங்களிலிருந்து குபுகுபுவென புகை வரத் துவங்கியுள்ளது.
ஷானுக்கு மூச்சு இருப்பதை உணர்ந்ததும், மைக்கேல் உடனே அவரைத் தூக்கிக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடலில் பல பாகங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.
Image: Michael McQuilken
ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் அனைவருமே உயிர் தப்பிவிட்டார்கள்.
என்ன நடந்தது?
நடந்தது என்னவென்றால், அந்த மலை உச்சியில், காற்றில் மின்னோட்டம் இருந்துள்ளது. அதுதான் அவர்களுடைய தலைமுடி செங்குத்தாக நிற்கக் காரணம். தான், ’ஹிஸ்ஸ்’ என்ற சத்தத்தையும் தெளிவாகக் கேட்டதாக பின்னர் தெரிவித்திருந்தார் மைக்கேல்.
Image: Michael McQuilken
ஆக, தங்கள் தலைமுடி செங்குத்தாக நிற்கும்போதே, அவர்கள் அனவரும் எச்சரிக்கையடைந்து கிழே ஓடிவந்திருக்கவேண்டும். ஏனென்றால், அதைத் தொடர்ந்து மின்னல் தாக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் அது. ஆனால், குறும்புத்தனமாக அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கேயே நின்றுகொண்டிருக்க, அவர்களை மின்னல் தாக்கிவிட்டது.
விடயம் என்னவென்றால், அவர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்துத்தான், அங்கு வருபவர்களை எச்சரிக்கும் போஸ்டர்களை உருவாக்கியிருக்கிறார்களாம் வனத்துறையினர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |