பிரான்சில் வீட்டு வாசலில் நின்ற பெண்மணியையும் சிறுமியையும் திடீரென தாக்கிய நபர்: பிரபலங்கள் கண்டனம்
பிரான்சில் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பெண்மணி ஒருவரையும் அவரது பேத்தியையும் திடீரென ஒரு நபர் தாக்கியதில் அவர்கள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பிரான்சிலுள்ள Bordeaux நகரில், ஒரு பாட்டியும் பேத்தியும் தங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்துள்ளார்கள். சற்று தொலைவில் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டு வீட்டுக்குள் செல்ல அவர்கள் முயலும்போது, தெருவில் நின்ற அந்த நபர் திடீரென ஓடிவந்து அவர்கள் கதவை மூடமுடியாதபடி தடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக அந்த வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், அந்த பாட்டியையும் அவரது பேத்தியான சிறுமியையும் இழுத்து தெருவில் வீசியுள்ளார்.
Ces images d’une attaque gratuite ciblant une femme et une fillette à Bordeaux sont terrifiantes.
— Jordan Bardella (@J_Bardella) June 19, 2023
Je ne veux pas d’une France où l’on peut être agressé, pour rien, sur le pas de sa porte.
Ne nous habituons jamais à ça. pic.twitter.com/pDuMXUJYwH
கீழே விழுந்த அந்த சிறுமியை மீண்டும் தூக்கி வீசிய அந்த நபர், கீழே விழுந்த ஏதோ ஒரு பொருளை எடுத்துகொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
பிரபலங்கள் கண்டனம்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எரிக் ஸெம்மார் உட்பட பிரான்ஸ் பிரபலங்கள் பலர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Jordan Bardella, பெண் ஒருவரும் சிறுமி ஒருத்தியும் எந்த காரணமுமின்றி அவர்கள் வீட்டு வாசலிலேயே தாக்கப்படும் ஒரு அதிர்ச்சியளிக்கும் விடயத்தை பார்க்க என்னால் முடியாது, இப்படி ஒரு பிரான்ஸ் எனக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
73 வயதான அந்த பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது தற்போதைய நிலைமை குறித்து தகவலில்லை.
அத்துடன், சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குள் பொலிசார் தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்துவிட்டார்களாம். தாக்கப்பட்ட மற்றும் தாக்குதலுக்குள்ளான யாருடைய பெயரும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |