கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்! மாஸ் ஹீரோ கைதான வழக்கு குறித்து பேசிய நடிகர் சுதீப்
கர்நாடகாவில் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு நீதி வேண்டும் என நடிகர் சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரேணுகாசாமி எனும் சினிமா ரசிகர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் பிரபல நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உட்பட 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகாசாமி வழக்கு பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் நடிகர் சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''அந்த குடும்பத்திற்கு நீதி வேண்டும். ரேணுகாசாமியின் மனைவிக்கு நீதி வேண்டும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நீதியின் மீது அனைவரும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த வழக்கில் நீதி வெல்ல வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்றும், அதனை யாரும் கையில் எடுக்கக் கூடாது என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |