ராகுல் காந்தியால் 5 லிட்டர் பாலை கீழே கொட்டி ரூ.250 நஷ்டம் அடைந்தேன்.., வழக்கு தொடர்ந்த பீகார் நபர்
ராகுல் காந்தி பேசியை கேட்டு 5 லிட்டர் பாலை கீழே கொட்டியதில் ரூ.250 நஷ்டம் அடைந்திருப்பதாக பீகாரில் நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வினோத வழக்கு
இந்திய மாநிலமான பீகார், சமஸ்திபூர் மாவட்டத்தின் சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. இவர், ராகுல் காந்தியால் ரூ.250 நஷ்டம் அடைந்ததாக கூறி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த வாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதை கேட்ட அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்டேன்.
இதனால் அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு ரூ.250 நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம்.
நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிய வேண்டும்" என்றார்.
முன்னதாக பேசிய ராகுல் காந்தி, "நாம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு எதிராகவும் போராட வேண்டும்" என்றார்.
இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்து என்று கூறி ராகுல் காந்தியை பாஜக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |