நாள்பட்ட முதுகு வலி பிரச்சனையால் அவதியா? இந்த உடற்பயிற்சிகளை மறக்கமால் செய்திடுங்க!
நாள்பட்ட முதுகு வலி பிரச்சனை மற்றும் கூன் முதுகு ஆகிய பிரச்சனைகளையும் யோகாசனங்கள் மூலம் கூட சரி செய்ய முடியும்.
அந்தவகையில் அவற்றில் சில யோகாசனங்களை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
கேட் கவ் போஸ்
உங்கள் கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு கிட்டத்தட்ட ஒரு பசுமாட்டைப் போல நிற்க வேண்டும்.
பிறகு ஒரு பூனை தன்னுடைய உடலை நெட்டி முறிக்கும் போது எந்த வித பாவனை செய்யுமோ அதே போன்று உங்களது பின்புறத்தை முடிந்த அளவு நன்றாக நெட்டி முறிக்க வேண்டும். இந்த நிலையில் நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
பிரிட்ஜ் போஸ்
உங்கள் முதுகு தரையில் படுமாறு நன்றாகப் படுத்துக்கொண்டு மூச்சை இழுத்து விடவும். பிறகு உங்களது இடுப்புப் பகுதியை மேல் நோக்கி நன்றாகத் தூக்கி உங்களது கைகளை இடுப்பிற்குக் கீழே வருமாறு தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும். இதே ஆசனத்தில் முடிந்த அளவு இருந்து கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விடவும்.
கேமல் போஸ்
இந்த ஆசனத்தைச் செய்வதற்கு நீங்கள் முதலில் முழங்காலிட்டு அமர வேண்டும். அதன் பிறகு உங்களது கால் பாதத்தில் பின்பகுதியில் உள்ள பந்து போன்ற அமைப்பைத் தொட்டுக்கொண்டு பின்பக்கமாகச் சாய வேண்டும்.
கோப்ரா போஸ்
இது கிட்டத்தட்டப் பார்ப்பதற்கு ராஜ நாகம் படம் எடுப்பதைப் போல் இருக்கும். இந்த ஆசனத்தைச் செய்வதற்கு நீங்கள் உங்கள் வயிற்றுப் பகுதி அல்லது முகம் தரையில் படுமாறு நன்றாகப் படுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் முகத்தைத் தூக்கி உங்களது முதுகை நன்றாகப் பின்பக்கம் வளைக்க வேண்டும்.
இதன் மூலம் முதுகு வலியிலிருந்து விடுதலை பெறுவதோடு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கும்.
ஹாஃப் லார்ட் ஆப் த ஃபிஷ் போஸ்
இந்த ஆசனத்தில் நீங்கள் உங்களது முதுகுப் பகுதியை மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதையும் நன்றாக ஸ்ட்ரெச் செய்ய வேண்டும்.
முதலில் சாதாரணமாக எப்போதும் உட்காருவதைப் போல் உட்கார்ந்து கொண்டு உங்களது முழங்காலை மட்டும் பயன்படுத்தி அதனை மேலே தூக்கி மற்றொரு காலை மற்றும் கீழே வைத்துக் கொண்டு உங்கள் உடல் முழுவதையும் முடிந்தவரைத் திருப்ப வேண்டும்.