தலைவலியால் கஷ்டப்படுறீங்களா? இந்த பயிற்சியை மறக்காமல் செய்திடுங்க போதும்
பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் பல முறை அனுபவிக்கும் ஒரு பொதுவான நிலை தலைவலி.
ஆனால் சிலருக்கு நாள்பட்ட தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி துரதிர்ஷ்டவசமாக வாழ்நாள் முழுவதும் தொடரும் தீவிர நிலையாக மாறிவிடும்.
இதிலிருந்து விடுபட சில யோகாசனங்கள் உதவுகின்றது.
தற்போது அதில் ஒரு யோகசானத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
எப்படி செய்வது?
முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். கால்கள் நேராக வைக்க வேண்டும்.
முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். இப்போது மெதுவா கஇடது காலை மேலே தூக்குங்கள். மெதுவாக வலது பாதத்தை நோக்கி உடலை வளையுங்கள்.
கைகளால் தரையை தொட முயலுங்கள். தரையை தொட முடியாவிட்டாலும், கால்களை பிடித்துக் கொள்ளலாம்.
இடது காலை மேலே நீட்டியபடி, வலது பக்கம் உடலை சாய்ந்தபடி சில நிமிடங்கள் இருங்கள்.
பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம். பின்னர் இப்போது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி இதே போல் செய்யுங்கள்.
பலன்கள்
- மன அமைதி தரும். தொடை, இடுப்பு வலு பெறும். கல்லீரல், சிறு நீரகம் செயல்கள் தூண்டப்படும்.
- ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும்.
- மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
- தொடை எலும்பை நீட்சியடைய உதவுகிறது.
- தொடைகள், முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்த உதவுகிறது.
- கால்கள் மற்றும் இடுப்புகளை நீட்சியடைய உதவுகிறது.
- தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.