முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உடனடியாக நீக்க உதவும் Facepack: எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- ½ கப்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- தேன்- 1 ஸ்பூன்
- தேயிலை மர எண்ணெய்- 2 சொட்டு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
பின் இதனுடன் தேன் மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கவும்.
இதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் வட்ட இயக்கங்களில் மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம்.
ஸ்க்ரப்பை முகத்தில் 2 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
முகத்தை கழுவிய பிறகு மென்மையான துண்டுடன் சருமத்தை மெதுவாகத் துடைத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |