பொங்கல் ஸ்பெஷல்: தித்திக்கும் சுவையில் கரும்புச்சாறு பொங்கல்.., எப்படி செய்வது?
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் வீடுகளில் சர்க்கரை பொங்கல் கட்டாயம் தயாரிக்கப்படும்.
அந்தவகையில், வித்யாசமான முறையில் கரும்புச்சாறு பொங்கலை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- கரும்பு சாறு- 3 கப்
- வெல்லம்- ¼ கப்
- நெய்- தேவையான அளவு
- முந்திரி- 20g
- உலர் திராட்சை- 20g
- ஏலக்காய்- 7
- தேங்காய்- ½
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
பின் கரும்பை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கரும்புச்சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பானையில் 3 கப் தண்ணீர் ஊற்றி பச்சரிசி சேர்த்து வேக வைக்கவும்.
பின் அரிசி கெட்டியாகி வந்ததும் கரும்பு சாறை ஊற்றி வேகவைக்கவும்.
இதற்கடுத்து இதில் வெல்லம் சேர்த்து நெய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை போட்டு கிளறவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறினால் சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |