பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு தளத்தில் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுபிடிக்கப்பட்டது.
தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலை
பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் திங்கள்கிழமை நடந்த மசூதி குண்டுவெடிப்பு தளத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் இன்று மீட்டனர்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 93-ஆக உயர்ந்தது, 221 பேர் பலத்த காயம் அடைந்தனர், இடிபாடுகளில் இருந்து மீதமுள்ள உடல்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
PTI
குண்டுவெடிப்பு
திங்கட்கிழமை மதியம் 1.40 மணியளவில் பொலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள், பொலிஸ், இராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
AFP
முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதால், அங்கிருந்தவர்கள் மீது கூரை இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு தற்கொலைத் தாக்குதலாகத் தோன்றியதாகவும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் உள்ள இடத்தில் குண்டுதாரியின் தலை மீட்கப்பட்டதாகவும், Capital City Police Officer பெஷாவர் முகமது அய்ஜாஸ் கான் தெரிவித்தார்.
AFP
தாக்குதல் நடத்தியவர்
தாக்குதல் நடத்தியவர் குண்டுவெடிப்புக்கு முன்பே பொலிஸ் லைன்ஸில் இருந்திருக்கலாம், மேலும் அவர் உள்ளே நுழைய அதிகாரப்பூர்வ வாகனத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மீட்பு நடவடிக்கை முடிந்ததும் குண்டுவெடிப்பின் சரியான தன்மை தெரியவரும் என்று அய்ஜாஸ் கான் கூறினார்.
AFP
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றுள்ளது.
இத்தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பரவலாக கண்டனத்துக்குள்ளானது.
Photograph: Fayaz Aziz/Reuters