வெடிகுண்டை கட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்! அடுத்து நிகழ்ந்த பயங்கரம்..பரபரப்பு சம்பவம்
இந்தோனேசியாவில் காவல் நிலையத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் காவலர் ஒருவர் பலியானார்.
காவல்நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்
இந்தோனேசியாவின் முக்கிய தீவு மாகாணமான ஜாவாவில் உள்ள அஸ்தானா அன்யார் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
கணநேரத்தில் அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்த நபரும், காவலர் ஒருவரும் பலியாகினர். மேலும் காவல் நிலையத்தில் இருந் 7 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அலறி ஓடிய மக்கள்
காவல் நிலையத்தில் இருந்து பலத்த சத்தம் மற்றும் புகை வெளியேறியதால் அக்கம்பக்கத்தினர் பீதியில் அலறியடித்து ஓடினர்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய அடையாள தெரியாத மர்ம நபருக்கு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
@Reuters
@AP Photo/Ahmad Fauzan

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.