விமான நிலையத்தில் தானாக நகர்ந்த சூட்கேஸ்.. சினிமாவை மிஞ்சும் திகில் சம்பவம்! வைரல் வீடியோ
அமெரிக்கா விமான நிலையத்தில் சூட்கேஸ் தானாக நகர்ந்து சென்ற வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
விமான நிலையத்தில் யாராவது திருடி கொண்டு போகும் சம்பவம் பார்த்திருப்போம். ஆனால் சூட்கேஸ் சூட்கேஸ் எந்த வித துணையும் இன்றி தனியாக நகர்வது இது தான் முதல்முறை. இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் Texas மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேட்ஸ் தவறுதலாக கீழே விழுந்து எந்த வித துணையும் இன்றி நேர்கோட்டில் ஓடி கொண்டிருந்தது.
இதை பார்த்து ரசித்த மக்களுக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸ் செல்லும் வழியில் பல வாகனங்கள் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அதன் அருகே ட்ரக் ஒன்று வேகமாக வந்தது. ஆனால் அந்த ட்ரக்கிடம் சூட்கேஸ் மாட்டி கொள்ளாமல் தப்பித்து விட்டது. இந்த ஆச்சரிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகின்றது.