செல்வமகள் சேமிப்பு திட்டம்: ரூ.1.5 லட்சம் சேமித்தால், 21 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
பெண் குழந்தையின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்காக மத்திய அரசு வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம்.
இந்தத் திட்டம், பெண் குழந்தையின் கல்வி, திருமணம் மற்றும் எதிர்காலத்திற்கான பாதுகாப்பான சேமிப்பாக கருதப்படுகிறது.
குழந்தை பிறந்த 10 ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் இந்தக் கணக்கைத் திறக்கலாம். கணக்கு திறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் வரை இது செயல்படும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

ஆனால் முழு 21 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. முதல் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினாலே போதும்.
உதாரணமாக, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாகும்.
அதன்பின் 6 ஆண்டுகள் வட்டி மட்டும் சேர்ந்து, இறுதியில் சுமார் ரூ.72 லட்சம் வரை கிடைக்கும்.
இந்தக் கணக்கை குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை பெற்றோர் இயக்குவார்கள். அதன் பிறகு கணக்கின் கட்டுப்பாடு அந்தப் பெண்ணுக்கு மாற்றப்படும்.

மேலும், குழந்தையின் உயர் கல்விக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
இதன் பொருள், முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை, ஈட்டப்பட்ட வட்டி மற்றும் பெறப்பட்ட இறுதி முதிர்வுத் தொகை ஆகியவற்றிற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |