ரிஷப ராசிக்கு செல்லும் சூரியன்! 30 நாட்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசியினர்
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இன்றைய மாதம் 14ஆம் தேதி அதாவது நேற்று சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்துள்ளார்.
இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை தரும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இந்த ஐந்து ராசிகளுக்கு மட்டும் முழுமையான ஒரு தாக்கத்தை தரவிருப்பதால், இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த சஞ்சாரத்தால் எந்த ஐந்து ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சூரியன் ஒரு முக்கியமான திரிகோணத்தின் அதிபதியாக இருக்கிறார், அதாவது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கவுள்ளார். ஆகவே சற்று எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.
இந்த கட்டத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைத்து, ஆரோக்கியமும் வளமாக கிடைக்கும். மேலும் காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை இந்த 30 நாட்களில் சந்திக்க நேரிடும் ஆகவே சற்று கவனத்துடன் நடந்துக் கொள்வது சிறந்தது.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சூரியன் ஒரு முக்கியமான திரிகோணத்தின் அதிபதியாக இருக்கிறார், அதாவது ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி முக்கியத்துவத்தினை தரும்.
காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையானது சிறிதளவு சண்டையுடன் இருக்க நேரிடும். இந்நிலையில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒற்றைத் தலைவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை இந்த 30 நாட்களில் சந்திக்க நேரிடும் ஆகவே சற்று கவனத்துடன் நடந்துக் கொள்வது சிறந்தது.
மிதுனம்
மிதுன ராசிக்கு சூரியன் ஒரு முக்கியமான திரிகோணத்தின் அதிபதியாக இருக்கிறார், அதாவது மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும்.
பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்களால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இவ்வேளையில் பல தடைகள் ஏற்படும். மேலும் நண்பர்களால் பல பணப்பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே இந்த 30 நாட்களும் சற்று கவனத்துடன் நடந்துக் கொள்வது சிறந்தது.
துலாம்
துலாம் ராசிக்கு சூரியன் ஒரு முக்கியமான திரிகோணத்தின் அதிபதியாக இருக்கிறார், அதாவது துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, பணப்பிரச்சினைகள் ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டும். . கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த 30 நாட்களும் சற்று கவனத்துடன் நடந்துக் கொள்வது சிறந்தது.
மகரம்
மகரம் ராசிக்கு சூரியன் ஒரு முக்கியமான திரிகோணத்தின் அதிபதியாக இருக்கிறார், அதாவது மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும்.
வாழ்க்கை துணையுடன் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். உறவுக்கு மரியாதை கொடுத்து பக்குவமாக நடந்துக் கொள்ள வேண்டும். மேலும் வாக்குவாதத்தில் ஈடுப்படுவதை தடுக்குக் கொள்ள வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் ஆகவே இந்த 30 நாட்களும் சற்று கவனத்துடன் நடந்துக் கொள்வது சிறந்தது.