புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் செல்ல பிரதமர் ரிஷி முடிவு
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டா போன்ற ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
PA Media
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் குறித்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஒன்றும், ருவாண்டா நாடு பாதுகாப்பான நாடாக கருதப்படலாம் என்று கூறியிருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், சில மனிதநேயக் குழுக்கள் மற்றும் எல்லை அலுவலர்கள் யூனியன் ஒன்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றனர்.
PA Media
மேல்முறையீட்டு நீதிமன்றம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.
அத்துடன், ருவாண்டா பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட முடியாது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பை ஏற்றுக்கொள்ள பிரதமர் மறுப்பு
அந்த தீர்ப்பு அரசுக்கு பெரும் அடியாக கருதப்படும் நிலையில், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக். அவர் மடுமின்றி, உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
Getty Images
இந்த நாட்டிற்குள் யார் வருவது என்பதை நாடும் அரசும்தான் தீர்மானிக்கவேண்டுமேயொழிய, குற்றவாளிக் கும்பல்கள் அல்ல என்று கூறியுள்ள ரிஷி, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய அரசு அனுமதி கோரும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |