ரத்தன் டாடா மறைவுக்கு சுந்தர் பிச்சை இரங்கல்: கடைசி சந்திப்பை நினைவுகூரும் செய்தி
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவுக்கு உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்திகளைத் தெரிவித்துவருகிறார்கள்.
அவ்வகையில், கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் டாடாவின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், டாடாவுடனான தனது கடைசி சந்திப்பு குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள செய்தி
My last meeting with Ratan Tata at Google, we talked about the progress of Waymo and his vision was inspiring to hear. He leaves an extraordinary business and philanthropic legacy and was instrumental in mentoring and developing the modern business leadership in India. He deeply…
— Sundar Pichai (@sundarpichai) October 9, 2024
கூகுள் அலுவலகத்தில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசிச் சந்திப்பில், Waymoவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், எதிர்காலம் குறித்த அவருடைய பார்வை உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது.
அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் பரோபகார மரபுடைமை எச்சத்தை விட்டுச் சென்றுள்ளார். அத்துடன், இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழிநடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக அவர் இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் அவர்.
இளைப்பாறுங்கள் ஸ்ரீ ரத்தன் டாடா ஜி அவர்களே, அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் சுந்தர் பிச்சை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |