பாரிஸ் உச்சி மாநாட்டில் மோடி பேசியதென்ன? சுந்தர் பிச்சை கூறிய விடயம்
பிரான்ஸில் நடந்த AI உச்சி மாநாட்டில் தன்னிடம் உரையாடியது குறித்து சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு
பாரிஸ் நகரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சை ஆகியோரும் பங்கேற்றனர். இமானுவல் மேக்ரானை சந்தித்த மோடிக்கு அரண்மனையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
பின்னர் ஹொட்டலுக்கு திரும்பிய பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் சந்தித்து பேசினர். பிரான்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை அவர் சந்தித்தார்.
சுந்தர் பிச்சை
அப்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் பேசிய மோடி நிறைய சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் பிச்சை, "பாரிஸ் நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தபோது, அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை இன்று சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் AI தொழில்நுட்பம் கொண்டுவர கூடிய வியக்கத்தக்க வாய்ப்புகளை பற்றியும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்காக நாம் நெருங்கி பணியாற்றுவதற்கான வழிகளை பற்றியும் விவாதித்தோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |