பெற்றோரின் ஆசையை நிறைவேற்றாத சுந்தர் பிச்சை.., அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன?
Google CEO சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சுந்தர் பிச்சை
Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை (Google ceo sundar pichai). கடந்த 2004 -ம் ஆண்டு Google நிறுவனத்தில் இணைந்த இவர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் உள்ளார்.
இவர், தமிழக மாவட்டமான மதுரையில் பிறந்தவர். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். சென்னையில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். பின்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
பெற்றோரின் ஆசை
இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியுள்ளார். சுந்தர் பிச்சையின் பெற்றோருக்கு, தனது மகன் பிஎச்டி படிக்க வேண்டும் என்பது தான் அவர்களது மிகப்பெரிய ஆசை.
ஆனால் இவர், தான் பிஎச்டி படிப்பதை விட தனக்கு கிடைக்கும் வேலையில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தார். அதனால் தனக்கு கிடைத்த வேலையில் சேர்ந்தார்.
ஒருவேளை சுந்தர் பிச்சை அவரது பெற்றோர் ஆசைப்பட்டபடி பிஎச்டி படித்திருந்தால் இப்போது பலருக்குத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு செல்ல முடியாமல் போயிருப்பார்.
மேலும், கூகுள் நிறுவனத்தில் தான் வேலைக்கு செல்லாமல் இருந்திருந்தால் தனது வாழ்க்கை பயணம் வேறு திசையில் சென்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், "இந்தியாவில் நடைமுறை அனுபவத்தைவிடக் கல்விக்குத்தான் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், நிஜ உலகில் அனுபவம் தான் மதிப்பு வாய்ந்தவை. இந்திய மாணவர்களிடத்தில் அதிக திறமை உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |