CSK விற்கு வாழ்த்துக்கூறிய சுந்தர் பிச்சை; வைரலாகும் டுவிட்
நேற்று நடைபெற்ற IPL இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக வெற்றி கோப்பையை கைப்பற்றியது.
இதற்காக பலரும் வாழ்த்து தெரிவித்து வரும்வேளையில் Google நிறுவனத்தின் C.E.O சுந்தர் பிச்சை தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி,
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK களமிறங்கியது.
ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தநிலையில், திடீரென்று பெய்த மழையால் போட்டி தடைப்பட்ட நிலையில் மழை நின்றவுடன், நள்ளிரவு 12 மணியளவில் போட்டி தொடங்கப்பட்டது.
சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Singa Parambarai ??✨#CHAMPION5 #WhistlePodu #Yellove ? pic.twitter.com/ihUAq6XweH
— Chennai Super Kings (@ChennaiIPL) May 30, 2023
தொடர்ந்து, துபே மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தனர். 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.
துபே 32 ரன்களும், ஜடேஜா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சுந்தர் பிச்சையின் வாழ்த்து,
"சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா IPL சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்" என தெரிவித்திருந்தார்.
Some final that one! Great #TATAIPL as always and congrats to CSK! and GT will be back stronger next year! https://t.co/R75CJeTfgx
— Sundar Pichai (@sundarpichai) May 29, 2023