நான் உயிர் விடும் முன் தோனி அடித்த சிக்ஸர்களை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் - கவாஸ்கர்
நான் உயிர் விடும் முன் தோனி அடித்த சிக்ஸர்களை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கண் கலங்கி தெரிவித்தார்.
தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர். தோனியும் ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார்.
இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் தோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். தோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் தோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.
கண்கலங்கிய கவாஸ்கர்
ஆட்டோகிராப் வாங்கிய சுனில் கவாஸ்கர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சென்னை சேப்பாக்கத்தில் கடைசியாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி முடிந்த பிறகு சென்னை கிங்ஸ் வீரர்களும், தோனியும் ரசிகர்களிடம் நன்றி தெரிவிக்கப்போவதாக கேள்விப் பட்டேன்.
உடனே, போட்டி முடிந்தவுடன் மைதானத்திற்குள் நுழைந்து தோனியிடம் ஆட்டோகிராப் வாங்க ஓடி வந்தேன். தோனியிடம் சென்று, நான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராஃப் போடச் சொன்னேன். நல்லவேளை அங்கிருந்த ஒளிப்பதிவாளரிடம் மார்க்கர் பேனா இருந்தது.
தோனி அவரிடம் அந்த பேனாவை வாங்கி என் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்டார். என்னால் நல்ல தருணத்தை மறக்க முடியாது. நெகிழ்ச்சியான தருணம் அது. தோனி இந்திய கிரிக்கெட்டுக்காகப் பல சாதனைகளை செய்துள்ளார். அவரிடம் ஆட்டோகிராஃப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது.
"நான் இறப்பதற்கு முன் 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்றதையும், 2011ம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸைகளையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என்று தழுதழுத்த குரலில் கண் கலங்கி நெகிழ்ச்சியாக பேசினார்.
The full video of the meet up of World Cup winning legends
— MahiEra (Less Active) (@themahiera) May 17, 2023
Sunil Gavaskar & MS Dhonipic.twitter.com/9DigL7mpMz