இந்திய அணி எப்போது மணப்பெண்ணாக மாறப்போகிறது... : பங்கமாய் கலாய்த்த கவாஸ்கர்
இந்திய அணி மணப்பெண்ணின் தோழியாக இருந்து வருகிறது... எப்போது மணப்பெண்ணாக மாறப்போகிறது என்று இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கலாய்த்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இத்தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இத்தொடரில் சீனியர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம்.
அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை களத்தில் இறக்கியிருக்கலாம். தேர்வுக்குழுவினர் இளம் வீரர்களால் சீரியர் வீரர்களுக்கு நெருக்கடி வராதபடி பார்த்துக் கொள்கிறார்களா?
தற்போது அஜித் அகார்கர் தேர்வுக் குழு தலைவராகியிருக்கிறார். இவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதிர்காலத்தில் நல்ல வீரர்களை இவர் தேர்வு செய்வாரா இல்லை பழைய நிலைதான் தொடருமா என்று பார்க்க வேண்டும். இந்திய அணி மணப்பெண் தோழியாகத்தான் இருக்கிறது... எப்போது மணப்பெண்ணாக மாறப்போகிறது என்று தெரியவில்லை.
விராட் கோலி திறம்பட விளையாடி வருகிறார். அவர் முதல் டெஸ்டில் தவறவிட்டதை இரண்டாவது டெஸ்ட்டில் சதம் அடித்து அதை பூர்த்தி செய்து விட்டார். அவர் திறமையோடு, எதிரணியின் பந்துவீச்சு, ஆடுகளம் எப்படி இருக்குது என்பதை நன்கு உணர்ந்து, யோசித்து விளையாடி இருக்கிறார் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |