ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது பெண்கள் நடனம் கூடாது - முன்னாள் வீரர்
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆயுதத் தாக்குதல் தொடங்கியதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் திகதி மாற்றியமைக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டது.
சுனில் கவாஸ்கர்
அதன்படி, 17ஆம் திகதி பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) ஐபிஎல் தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |