அவர் மட்டும் தான் அணியில் இருக்கிறாரா? இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் வீரர் காட்டம்
தென் ஆப்பிரிக்காவுக்கு டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருவதாகவும், ஏனைய பந்துவீச்சாளர்கள் மோசமாக விளையாடுவதாகவும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணி நிர்ணயித்த 149 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. ஆவேஷ்கான், ஹர்திக் பாண்ட்யா, சஹால் ஹர்ஷல் பட்டேல் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறினர்.
ஆனால், புவனேஷ்வர்குமார் மிரட்டலாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Photo Credit: Twitter (@BCCI)
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'இந்த அணியில் புவனேஷ்வர் குமாரைத் தவிர வேறு யாரும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களாக இல்லை. அதுதான் இந்த தொடரின் மிகப்பெரிய பிரச்சனை. விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும். அதனால் தான் முதல் டி20யில் 211 ஓட்டங்களை குவித்தாலும் இலக்கை காப்பாற்ற முடியவில்லை' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Twitter