நடத்த விடமாட்டேன்! தன்னைத்தானே திருமணம் செய்வதாக அறிவித்த பெண்ணுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்த பெண்ணுக்கு, பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் க்ஷமா பிந்து (24) என்ற இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.
தன் மீதான அதீத காதலால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஜூன் 11-ஆம் திகதி பெற்றோரின் சம்மதத்துடன் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி திருமணம் செய்வதாக கூறினார்.
இந்த நிலையில், க்ஷமா பிந்து தன்னை தானே திருமணம் செய்துகொள்வதற்கு பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் சுனிதா சுக்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பிந்துவுக்கு மனநலம் சரியில்லை. இந்து கலாச்சாரத்தில் ஒரு ஆண் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண் ஒரு பெண்ணையோ திருமணம் செய்துகொள்ளலாம் என்று எங்கும் எழுதப்படவில்லை.
இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானவை. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். கோயில் புனிதமான இடம், இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.