நாசாவிலிருந்து ஓய்வு பெறும் சுனிதா வில்லியம்ஸ்! இவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு தெரியுமா?
புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் நாசாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது சம்பளம்? ஓய்வூதியம் இவற்றினை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சுனிதா வில்லியம்ஸ்
புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் நாசாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்த்த இவர் இந்திய பெண்கள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றார்.
இவர் நாசாவில் இருந்து ஓய்வு பெறுவது விண்வெளி அறிவியலில் புகழ்பெற்ற சகாப்தத்தின் முடிவைக் குறிக்கின்றது. இந்நிலையில் அவர் வாங்கிய சம்பளம், அவரது விண்வெளி பயணம், கிடைக்கும் ஓய்வூதியம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
சுனிதா வில்லியம்ஸின் வாழ்க்கை ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாகவும், சுமார் 27 ஆண்டு கால வெற்றிப் பயணத்தையும் குறிக்கின்றது.
இவர் தனது பதவிக்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்று வெற்றிகரமான பயணத்தினை முடித்துள்ளதுடன், நீண்ட காலம் விண்வெளியில் பணியாற்றிய பெண்களில் ஒருவராகவும் இருக்கின்றார்.

சம்பளம் எவ்வளவு?
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, அமெரிக்க அரசாங்க விதிமுறையின் படியே விண்வெளி வீரர்களுக்கு சம்பளம் வழங்குகின்றது. அனுபவம் நிறைந்த சுனிதா வில்லிம்ஸ் பதவி GS-15 என்ற மிக உயர்ந்த கிரேட் கொண்ட பதவியாக உள்ளது.
இந்த கிரேடின் படி, அவரது ஆண்டு சம்பளம் தோராயமாக 1.26 கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது. அதாவது அமெரிக்க மதிப்பு $152,258 ஆகும்.
இவர் விண்வெளியில் அதிக நாட்கள் கழித்திருந்தாலும் இதற்கான அதிக நேரம் சம்பளம் மற்றும் பிற ஊதியம் எதுவும் கிடையாதாம். மேலும் சுனிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பிரீமியம் சுகாதார காப்பீடு மற்றும் ஆலோசனையினை நாசா வழங்கியுள்ளது.
மேலும் இவர் விண்வெளியில் நிலைய பயணத்தின் போது, அவரது செலவுகள், உணவு அனைத்தும் நாசாவே கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தினமும் சிறிய செலவுகளுக்காக தோராயமாக ரூபாய் 347 வழங்கப்பட்டுள்ளதாம்.

ஓய்வூதியம், சொத்து மதிப்பு எவ்வளவு?
நாசா ஓய்வு பெறும் தனது ஊழியர்களுக்கு மத்திய சிவில் ஊழியர்களைப் போன்று அனைத்து சலுகைகளையும் கொடுத்துள்ளது. அதாவது மத்திய ஊழியர் ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு, சிக்கன சேமிப்பு திட்டம் போன்றவையாகும்.
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. மேலும் தங்களது அனுபவம், அவர்களின் சராசரி சம்பளத்தினை பொறுத்து வழங்கப்படுகின்றது.
இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.42 கோடி ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுனிதா தனது கணவருடன் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹுஸ்டனில் வசித்து வருகின்றார்.

விண்வெளியில் இருந்த நாட்கள் எத்தனை?
சுனிதா வில்லியம்ஸ் மொத்தமாக விண்வெளியில் 608 நாட்கள் இருந்துள்ளார். மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்தில், விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் இணைந்து, 286 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்து, அமெரிக்கர்களில் ஆறாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.
நாசாவின் தகவலின்படி, சுனிதா மொத்தம் 62 மணி நேரம் மற்றும் 6 நிமிடங்கள் நீடித்த ஒன்பது விண்வெளி நடைகளை முடித்துள்ள இவரே விண்வெளியில் அதிகம் நடந்த பெண் என்ற பெருமையையும், விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல்நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடைசியக மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் என்னவெனில் வெறும் எட்டு நாள் பயணமாக கடந்த ஜுன் 2024ம் ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா, அங்கு விண்கலத்தின் செயலிழப்பு காரணமாக ஒன்பது மாதங்கள் அங்கு இருந்துள்ளார்.
அங்கிருந்து அவர் நேரத்தினை வீணாக்காமல், விண்வெளியில் விவசாயம் செய்து அங்கு ரோமைன் லெட்டூஸ் வளர்ப்பிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |