88 பந்தில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி! மூவர் சிக்ஸர்மழை..நொறுங்கிய மார்க்ரம் அணி
The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.
ஜோஸ் பட்லர்
ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் (Jos Buttler) 33 பந்துகளில் 63 ஓட்டங்களும், கிளாசென் 27 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 181 ஓட்டங்கள் குவித்தது. நேதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும், கார்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
புரூக், கிராவ்லே வாணவேடிக்கை
அடுத்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் ரிக்கெல்டன் 13 ஓட்டங்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார்.

பின்னர் கைகோர்த்த ஹாரி புரூக், ஜக் கிராவ்லே கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. இவர்களது அதிரடியில் சன்ரைஸர்ஸ் லீட்ஸ் அணி 88 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ஜக் கிராவ்லே (Zak Crawley) 34 பந்துகளில் 56 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), ஹாரி புரூக் 17 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |