அமெரிக்காவிடம் சிக்காமல் இருக்க... மீண்டும் வெனிசுலா திரும்பிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்
கடந்த வாரம் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற 'கெல்லி' என்ற மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல், மீண்டும் வெனிசுலாவிற்கே திரும்பி வந்துள்ளது.
செஞ்சுரீஸ் கப்பல்
வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்களை அமெரிக்கா முற்றுகையிட்டுக் கைப்பற்றிவரும் நிலையில், அமெரிக்காவிடம் சிக்காமல் இருக்க கெல்லி கப்பல் மீண்டும் திரும்பியுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று சுமார் 1.9 மில்லியன் பீப்பாய்கள் வெனிசுலாவின் மெரே கனரக கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய செஞ்சுரீஸ் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை முற்றுகையிட்டு நிறுத்தியது.
மட்டுமின்றி, வெனிசுலாவிற்கு எண்ணெய் ஏற்றச் சென்ற இன்னொரு கப்பலையும் அமெரிக்கா முற்றுகையிட்டது. கடந்த வாரம், செஞ்சுரீஸ் மற்றும் கெல்லி ஆகிய இரு கப்பல்களும் வெனிசுலா கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்புடன் ஏறக்குறைய ஒரே நேரத்தில் புறப்பட்டன.
ஆனால், புறப்பட்ட அதே வேகத்தில் கெல்லி கப்பல் மீண்டும் வெனிசுலாவிற்கே திரும்பியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஸ்கிப்பர் என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பலை அமெரிக்காப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து,

சிக்கும் நிலை ஏற்படலாம்
ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவில் தங்கள் உரிமையாளர்களிடமிருந்து புதிய உத்தரவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
வெனிசுலாவில் இருந்து வெளியேறினால், அமெரிக்க கடோர காவல்படையிடம் சிக்கும் நிலை ஏற்படலாம் என்றே அஞ்சுகிறார்கள்.

தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் அனைத்தும் வெனிசுலாவில் இருந்து வெளியேறினால் அல்லது வெனிசுலாவிற்கு சென்றால், கட்டாயம் முற்றுகையிடப்படும் என கடந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
வெலிசுலா ஜனாதிபதி மதுரோவிற்கு அழுத்தமளிக்கவே ட்ரம்ப் நிர்வாகம் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |