இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம்

United Kingdom Epstein Files
By Balamanuvelan Feb 10, 2026 11:25 AM GMT
Report

இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ராஜகுடும்பத்துக்கான மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது.

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

2021ஆம் ஆண்டு, இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக வழக்குத் தொடர்ந்தார் விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் பெண்.  

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கிய அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு வந்தபோது ஆண்ட்ரூ தன்னுடன் பல முறை உறவு கொண்டதாகவும், தனக்கு அப்போது 17 வயது மட்டுமே என்றும் விர்ஜினியா கூறிய விடயத்தால் ராஜகுடும்பம் அதிர்ந்தது. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

ஆண்ட்ரூ ராஜகுடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். என்றாலும், பணத்தைக் கொடுத்து அதை பெரிய அளவில் வெளியே வரவிடாமல் செய்துவிட்டார்கள். ஆண்ட்ரூ எதுவுமே நடவாததுபோல நடமாடிவந்தார்.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பிலான, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களை வெளியிட்டுவருகிறது. 

தலைமறைவானாரா இளவரசி யூஜெனி... எப்ஸ்டீன் ஆவணத்தில் சிக்கிய பிறகு வெளியானப் புகைப்படம்

தலைமறைவானாரா இளவரசி யூஜெனி... எப்ஸ்டீன் ஆவணத்தில் சிக்கிய பிறகு வெளியானப் புகைப்படம்

அந்த ஆவணங்கள் எப்ஸ்டீனுக்கும் ஆண்ட்ரூவுக்கும் இடையிலான பல மின்னஞ்சல் பகிர்வுகளையும், புகைப்படங்களையும் வெளியிட, ஆண்ட்ரூ விர்ஜினியாவுடன் மட்டுமல்ல, வேறு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

அதில், வரிசையாக ஐந்து பெண்கள் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் ஆண்ட்ரூ படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும், ஒரு பெண்ணின் அருகே ஆண்ட்ரூ நாலுகாலில் நிற்கும் புகைப்படம் ஒன்றும் இருந்தன. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

அத்துடன், எப்ஸ்டீன், ஆண்ட்ரூவுக்காக, பிரித்தானியர் அல்லாத ஒரு பெண்ணை அவரது வீடான ராயல் லாட்ஜுக்கு அனுப்பிவைத்ததும் தெரியவந்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவால் தலைக்குனிவு

கடந்த அக்டோபரில், இங்கிலாந்திலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த மன்னர் சார்லசிடம், ஆண்ட்ரூ தொடர்பில் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார் ஒருவர். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த மன்னர் சார்லஸ், பொதுமக்களை சந்தித்த நிலையில், ரிச்சர்ட் என்னும் நபர் மன்னரைப் பார்த்து, ’உங்கள் சகோதரரை விசாரிக்கக்கூடாது என பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தீர்களா?’ என சத்தமிட்டார்.

சில ஊடகவியலாளர்களும் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

சமீபத்தில் உச்சி மாநாடு ஒன்றிற்கு சென்றிருந்த மன்னரின் தம்பியான இளவரசர் எட்வர்டிடமும் ஆண்ட்ரூ தொடர்பில் கேள்வி எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.

ஆக, ஆண்ட்ரூவால் ராஜகுடும்பத்துக்கு தலைக்குனிவு தொடர்கிறது. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சையால் மக்கள் ஆதரவை இழந்துவரும் ராஜகுடும்பம் | Support For Uk Royal Falls After Epstein Leaks

இந்நிலையில், பிரித்தானியாவுக்கு மன்னராட்சி வேண்டுமா அல்லது பிரித்தானியாவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆட்சி செய்யவேண்டுமா என 2,100 வயது வந்த பிரித்தானியர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, பிரித்தானியாவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆட்சி செய்யவேண்டும் என 32 சதவிகிதம் மக்கள் பதிலளித்துள்ளனர்.

இதற்கிடையில், ராஜகுடும்பத்துக்கு மக்களிடையே ஆதரவு சரிந்துள்ளதும் சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் ராஜகுடும்பத்துக்கு 48 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 45 சதவிகித மக்கள் மட்டுமே ராஜகுடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US