வெளிநாட்டவர்கள் சுவிஸ் உள் விவகாரங்களில் தலையிடுவதை சுவிஸ் மக்கள் விரும்புகிறார்களா?: ஆய்வு முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக நேற்று வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் ஒன்று, வெளிநாட்டவர்கள் உள் விவகாரங்கள் தொடர்பான வாக்கெடுப்புக்களில் பங்கேற்கலாமா என்பது குறித்தது.
சுவிஸ் வாழிட உரிமம் இல்லாதவர்கள், உள் நாட்டு விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கும் விடயங்களில் வாக்களிக்கலாமா என்ற விடயம் குறித்த வாக்கெடுப்பில், 73.2 சதவிகிதம் வாக்காளர்கள், வெளிநாட்டவர்கள் சுவிஸ் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என முடிவு செய்துள்ளார்கள்.
Young Socialist group என்ற அமைப்பு கொண்டு வந்த இந்த முன்மொழிவை எதிர்த்து நடுநிலையாளர்களும், வலதுசாரியினரும் வாக்களித்துள்ளார்கள். வெளிநாட்டவர்கள் உள் நாட்டு அரசியலில் தலையிடுவதற்கு முன், ஒரு சுவிஸ் பாஸ்போர்ட் பெற முயற்சி செய்யட்டும் என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
சுவிட்சர்லாந்திலுள்ள 26 மாகாணங்களில், இதுவரை 8 மாகாணங்கள் மட்டுமே நிரந்தர வாழிட உரிமம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன.
குறிப்பாக, பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில், வெளிநாட்டவர்களுக்கும் மாகாண வாக்கெடுப்பில் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.