அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை.., நடிப்பதற்கு ஆசைப்படும் சுரேஷ் கோபி
சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு அமைச்சர் பதவியை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது
கேரளாவில் உள்ள நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த 2016-ம் ஆண்டில் பாஜக கட்சியில் இணைந்தார்.
பின்னர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பியானார் சுரேஷ் கோபி. இதையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பின்பு அவர் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியால் சினிமாவில் நடிக்க முடியவில்லை என்றும், இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறியுள்ளார் சுரேஷ் கோபி.
மேலும், சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளதாகவும், பணம் சம்பாதிப்பது அவசியமானது என்றும் கூறியுள்ள சுரேஷ் கோபி, சினிமா வாழ்க்கையை துறந்து அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை என்கிறார்.
அதோடு, குடியரசுத்தலைவரால் மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |