ருதுராஜை பார்க்கும்போது அப்படியே தோனி போல் இருக்கிறார் - புகழ்ந்து தள்ளிய சுரேஷ் ரெய்னா
சென்னை அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ருதுராஜ் கெய்க்வாடை முன்னாள் சென்னை அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
ருதுராஜை புகழ்ந்து தள்ளிய சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தன்னுடைய துடிப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐபிஎலில் 590 ஓட்டங்களை எடுத்து அசத்தினார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5-வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் இந்திய அணியில் தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாடை சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'ருதுராஜ் கெய்க்வாடை பார்க்கும் போது அப்படியே தோனி போல் உள்ளார். அவருடைய நிதானமும், அமைதியும் எனக்கு தோனியைத்தான் நினைவுப்படுத்துகிறது. அவர் களத்தில் விளையாடும்போது பெரிதான அழுத்தத்தை வெளிப்படுத்தியது கிடையாது' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |