நானும் பிராமணர் தான்: சர்ச்சையை கிளப்பிய ரெய்னாவின் பேச்சு
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) வர்ணனையின் போது சுரேஷ் ரெய்னா, நானும் பிராமணர் தான் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டி.என்.பி.எல் சீசனின் முதல் போட்டி திங்களன்று லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் இடையே நடைபெற்றது.
போட்டியின் போது சுரேஷ் ரெய்னாவிடம், தென்னிந்திய கலாச்சாரத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டுடீர்கள் என வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரெய்னா, நானும் பிராமணன் என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாக நினைக்கிறேன்.
நான் சென்னையில் 2004 முதல் விளையாடி வருகிறேன், நான் சென்னையின் கலாச்சாரத்தை விரும்புகிறேன்.
நான் எனது அணியினரை நேசிக்கிறேன். நான் அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி (சுப்பிரமணியம் பத்ரிநாத்), பாலா பாய் (எல் பாலாஜி) ஆகியோருடன் விளையாடியுள்ளேன்.
சென்னையிலுள்ள கலாச்சாரத்தை விரும்புகிறேன், மேலும் CSK இன் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா கூறிய இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Did #SureshRaina just say ‘Am also a Brahmin’ on national telivision..??
— The Illusionist (@JamesKL95) July 19, 2021
Chennai culture... hmmm#TNPL2021 pic.twitter.com/zKa2nwoeIs