CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா

Chennai Super Kings Suresh Raina
By Karthikraja Sep 04, 2026 10:15 AM GMT
Report

suresh raina wish to return csk as coach: சுரேஷ் ரெய்னா, CSK அணியின் பயிற்சியாளராக அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

CSK அணியின் பயிற்சியாளராக ரெய்னா விருப்பம்

ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த CSK அணி, 2025 ஐபிஎல் தொடரில் கடைசி இடம், 2026 ஐபிஎல் தொடரில் 8வது இடம் என பரிதாபமான நிலையில் உள்ளது.

2009 ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா | Suresh Raina Wish To Return Csk As Coach Or Mentor

இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் CSK அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட CSK முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.  

பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

ஆகாஷ் சோப்ராவின் 'பெயிட் & பவுல்' என்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா | Suresh Raina Wish To Return Csk As Coach Or Mentor

இதில், மீண்டும் CSK அணியுடன் காணப்பட வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் அவர்களிடம் இதுபற்றி கேட்டிருக்கிறேன், மேலும் எனது ஆர்வத்தையும் தெரிவித்திருக்கிறேன். இப்போது முடிவெடுப்பது சிஎஸ்கே நிர்வாகத்தின் கையில் உள்ளது.

ஒரு பயிற்சியாளராகவோ அல்லதுவழிகாட்டியாகவோ என்னால் அணிக்கு பங்களிக்க முடியும் என்று அவர்கள் கருதினால், நான் நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

சிஎஸ்கே எனக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அணியாக இருந்து வருகிறது, மேலும் எதிர்காலத்தில் மீண்டும் அவர்களுடன் இணைவது ஒரு கௌரவமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா | Suresh Raina Wish To Return Csk As Coach Or Mentor

CSK அணிக்காக 12 ஆண்டுகளில், 176 போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, 1 சதம், 33 அரைசதம் உட்பட 4687 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா | Suresh Raina Wish To Return Csk As Coach Or Mentor

மேலும், சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக உள்ள மைக் ஹசி இங்கிலாந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்திருத்துள்ள நிலையில், அவரும் தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US