சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை.., மருத்துவர் மீது புகார்
சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததால் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
தவறான அறுவை சிகிச்சை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் யுதிஷ்டிர். இவருக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருந்ததால் பெற்றோர் அவரை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர். பின்னர், கடந்த 12 -ம் திகதி சிறுவனின் கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர், சம்மந்தப்பட்ட மருத்துவரின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |