வயநாடு நிலச்சரிவு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா 50 லட்சம் நிதியுதவி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
285 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 285 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விக்ரம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக 20 லட்சம் ரூபாய் வழங்கினார்.
சூர்யா நிதியுதவி
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பிரார்த்தனைகள் என்றும் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் சகோதரரும் நடிகருமான கார்த்தி ஆகியோருடன் இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |