வயநாடு நிலச்சரிவு எனது நெஞ்சை உலுக்குகிறது.., நடிகர் சூர்யா உருக்கம்
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
270 ஆக உயர்வு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். அதோடு, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தன்னார்வலர்கள், ஆம்புலஸ் ஓட்டுநர்கள், ராணுவ மருத்துவ வாகனம் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றுள்ளனர்.
கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது.., வயநாடு மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கம்
சூர்யா உருக்கம்
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |