நடிகர் சூர்யாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
சட்டம் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"-யை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா செயல்படுகிறார் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சத்தியதேவ் லா அகாடமி
தமிழ்நாடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் 'சாத்தியதேவ்' நினைவாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இணைந்து உருவாக்கிய "சத்தியதேவ் லா அகாடமி" யை முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த "சத்தியதேவ் லா அகாடமி", சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் சூர்யாவிற்கு வாழ்த்து
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சூர்யாவிற்கு தனது ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,"சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம்.
1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது. இவை பயிற்சி செய்வது.
எனவே, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நீதியரசர் சந்துருவோடும், ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய… pic.twitter.com/8jHf1SjJFI
— M.K.Stalin (@mkstalin) July 16, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |