நம் உடலைப்பற்றி வியக்க வைக்கும் தகவல்கள்
நம் உடலில் பல வினோதமான அதிசயங்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள வியக்கத்தக்க 20 தகவல்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம் -
1. ஒரு நிமிடத்திற்கு நம் கண்கள் 20 முறை சிமிட்டுக்கின்றன. அதுவே, ஒரு வருடத்திற்கு 1 கோடிக்கு மேல் சிமிட்டுகிறது.
2. நம்முடைய வாழ்நாள் முழுவதும் காதுகள் வளர்ந்துக்கொண்டே போகுமாம்.
3. நம் காதுக்குள் உருவாகும் அழுக்குகள் இனிப்பாக மாறுமாம்.
4. நம் நாக்கில் 8000 சுவை அரும்புகள் இருக்கிறதாம். அந்த அரும்புகள் தான் சுவையை தெரிந்துகொள்ள உதவுமாம். ஒவ்வொரு அரும்புகளிலும் 100 செல்கள் உள்ளதாம்.
5. நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாவில் 40 ஆயிரம் லிட்டர் உமிழ் நீர்கள் சுரக்கிறதாம்.
6. தினமும் நம் மூக்கில் ஒரு கப் சளி வெளியேறுமாம்.
7. நாம் காலையில் தூங்கி எழுயும்போது 1 செ.மீ உயரமாக இருப்போமாம். இதற்கு காரணம் நம் எலும்புகளின் இடையிலுள்ள ஜவ்வுகள் விரிந்து சுருங்குவதால் ஏற்படுமாம்.
8. நம் உடலில் சோர்வு அடையாத உறுப்பு என்றால் அது இதயம்தானாம்.
9. நம் உடலில் உள்ள தோல் ஒவ்வொரு மாதமும் உரிந்து புதிதாக உருவாகுமாம். நம் வாழ்நாளில் நமக்கு 1000 முறை புதிய தோல்கள் உருவாகுமாம்.
10. நம் உடலில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைத் துளைகள் இருக்கிறதாம்.
11. நம் உடலில் நிமிடத்துக்கு 30 ஆயிரம் இறந்த செல்கள் உதிருமாம்.
12. நம்முடைய வாழ்நாளில் ஒரு ஆண்டு காலம் கழிவறைக்குள் நேரத்தை செலவிடுமாம்.
13. தினமும் நாம் கழிக்கும் சிறுநீரை ஒரு மாதத்தில் வைத்து ஒரு குளியல் தொட்டியை நிரப்பி விட முடியுமாம்.
14. ஒவ்வொரு நொடிக்கும் நம் உடல் 2 கோடியே 50 லட்சம் புதிய செல்களை உருவாக்குகிறதாம்.
15. நம் உடலிலிருந்து வருடத்திற்கு 4 கிலோ தோல் செல்கள் உதிர்கிறதாம்.
16. நம் நரம்புகளிலிருந்து ஒரு தகவல்கள் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் கடக்கிறதாம்.
17. நம் வாழ்நாளில் சராசரியாக 300 கோடி முறை இதயம் துடிக்கிறதாம்.
18. நம்முடைய இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட 10 சதவீதம் சிறியதாம்.
19. நம்முடைய பற்கள் சுறா மீனுடைய பற்களுக்கு இணையான வலிமை கொண்டதாம்.
20. நம் உடலில் 8 சதவீதம் ரத்தம் அடங்கி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |